/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., நிதித்துறை இயக்குநர் பொறுப்பேற்பு
/
என்.எல்.சி., நிதித்துறை இயக்குநர் பொறுப்பேற்பு
ADDED : ஜன 18, 2024 03:44 AM

நெய்வேலி: என்.எல்.சி.,யின் புதிய நிதித்துறை இயக்குனராக பிரசன்னகுமார் ஆச்சார்யா பொறுப்பேற்றார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், நிதித்துறை இயக்குனராக பணியாற்றி வந்த அவர், அதற்கு முன், ஒடிசாவின் கிரிட் கார்ப்பரேஷன், தேசிய அனல்மின் கழகம், டாடா பவர் ஆகிய நிறுவனங்களில் நிதித்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
இவர் ஏற்கனவே என்.எல்.சி., நிதிதுறையில், உயர் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். ஒடிசா மாநிலத்தின் உத்கல் பல்கலைக்கழகத்தில், வணிகவியலில் இளங்கலை பட்டம், கட்டாக் எம்.எஸ்., சட்டக்கல்லூரியில் இளங்கலை பட்டம், ஒடிசாவின் ராவண்ஷா பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் முதுகலை படித்துள்ளார்.
சுரங்கம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் விநியோகம் ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதோடு, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளார்.