/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டம்
/
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டம்
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டம்
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டம்
ADDED : அக் 05, 2024 05:10 AM

நெய்வேலி : என்.எல்.சி., ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கேட்டு ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் கொட்டும் மழையிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டது.
நெய்வேலி என்.எல்.சி.,யில் பணியாற்றிவரும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கத்தின் தலைவர் அந்தோணி செல்வராஜை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாலை 4 மணியளவில் ஜீவா தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ல் உள்ள ஸ்டோர் ரோடு அருகே நடந்த முற்றுகை போராட்டத்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர் தலைமை தாங்கினார். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூழலில் மழை பெய்ய துவங்கியது. இருப்பினும் தொழிலாளர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தை கைவிடுமாறு டி.எஸ்.பி., சபியுல்லா அறிவுறுத்தியும் போராட்டக்குழுவினர் கலைந்து செல்லாததை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி., நிர்வாகத்தினர். ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான 8.33 சவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.