/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'என்.எல்.சி., மின் உற்பத்தி 20,000 மெகா வாட்டாகும்'
/
'என்.எல்.சி., மின் உற்பத்தி 20,000 மெகா வாட்டாகும்'
'என்.எல்.சி., மின் உற்பத்தி 20,000 மெகா வாட்டாகும்'
'என்.எல்.சி., மின் உற்பத்தி 20,000 மெகா வாட்டாகும்'
ADDED : ஜன 27, 2025 04:04 AM

நெய்வேலி: ''என்.எல்.சி., மின் உற்பத்தி திறன் வரும் 2030ல், 20,000 மெகா வாட் ஆக உயர்த்தப்படும்,'' என, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில், 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அவர் பேசியதாவது:
என்.எல்.சி., நிறுவனத்தின் தற்போதைய மொத்த மின் உற்பத்தி திறன், 6,731 மெகா வாட்டாகவும், மொத்த சுரங்கத்திறன் ஆண்டுக்கு, 50.1 மில்லியன் டன்னாகவும் உள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தி திறனை, 20,000 மெகா வாட்டாகவும், மொத்த சுரங்கத்திறனை ஆண்டுக்கு, 100 மில்லியன் டன்னாகவும் உயர்த்த திட்டங்கள் உள்ளன.
விரைவில், என்.எல்.சி., பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.