/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., பள்ளி மாணவர்கள் கூடைப்பந்தில் அசத்தல்
/
என்.எல்.சி., பள்ளி மாணவர்கள் கூடைப்பந்தில் அசத்தல்
என்.எல்.சி., பள்ளி மாணவர்கள் கூடைப்பந்தில் அசத்தல்
என்.எல்.சி., பள்ளி மாணவர்கள் கூடைப்பந்தில் அசத்தல்
ADDED : மார் 19, 2025 09:34 PM

மந்தாரக்குப்பம்; மாவட்ட அளவிலான நடந்த கூடைப்பந்து போட்டியில் என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் மாவட்ட அளவிலான கூடை பந்து போட்டிகள் நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி ஆகிய ஊர்களிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை என்.எல்.சி., பள்ளி கல்வி செயலாளர் பிரபாகரன், விளையாட்டு பள்ளி தாளாளர் நாராயணசாமி, பள்ளி தலைமையாசிரியர் ஜாக்கப், பயிற்சியாளர் வடிவேல்முருகன், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்