/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் உற்பத்தியில் என்.எல்.சி., புதிய சாதனை
/
மின் உற்பத்தியில் என்.எல்.சி., புதிய சாதனை
ADDED : நவ 04, 2025 01:50 AM

நெய்வேலி:  என்.எல்.சி., இந்தியா நிறுவனம், ராஜஸ்தானில் பிகானேர் மாவட்டம் பர்சிங்சார் பகுதியில் உள்ள 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தில், கூடுதலாக 106 மெகாவாட் உற்பத்தியை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இத்திட்டத்தில் 52.83 மெகாவாட் திறன், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தது. தற்போது புதிதாக 106 மெகாவாட் இணைக்கப்பட்டதன் மூலம், மொத்த மின் உற்பத்தி 158.83 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இங்கு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிகத் திறன் கொண்ட இருமுக சூரிய ஒளித் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புதிய சூரிய மின்சக்தி நிலையம் மூலம், என்.எல்.சி.,யின் மொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 1,589 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இது குறித்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறுகையில், '2030க்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடையும் நோக்குடன், என்.எல்.சி., தனது விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு சூரிய மற்றும் காற்றாலை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன' என்றார்.

