/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய போட்டிகளில் சாதிக்கும் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள்
/
தேசிய போட்டிகளில் சாதிக்கும் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள்
தேசிய போட்டிகளில் சாதிக்கும் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள்
தேசிய போட்டிகளில் சாதிக்கும் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள்
ADDED : மார் 19, 2025 09:35 PM

மந்தாரக்குப்பம்; நெய்வேலி என்.எல்.சி., விளையாட்டு விடுதி 1987 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மையம் மற்றும் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி ஒருங்கிணைந்து நெய்வேலி வட்டம் 17 ல், என்.எல்.சி., விளையாட்டு பள்ளி விடுதியை நடத்தி வருகிறது.
இங்கு, 84 மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடகளம், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய, சர்வேதச அளவிலான போட்டிகளில் சாதித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர்.
அவர்களுக்கு ேவையான அனைத்து வசதிகளையும் என்.எல்.சி., நிறுவனம் செய்து கொடுக்கிறது.
விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேரும்போது பல்வேறு கல்லுாரிகளில் இடம் கிடைக்கிறது. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை தரப்படுவதால், இந்த விடுதியில் போட்டி போட்டு மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
இது குறித்து என்.எல்.சி., விளையாட்டு தடகள பயிற்சியாளர் ஜேம்ஸ் கூறுகையில், 'மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டும் முக்கியம்.
கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஏற்படுவதால் மாணவர்கள் படிப்பிலும் முதலிடம் பிடித்து சாதனை படைக்கின்றனர்.
அந்த வகையில், என்.எல்.சி., விளையாட்டு பள்ளியில் மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்' என, தெரிவித்தார்.