/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்
/
மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்
மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்
மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்
ADDED : நவ 06, 2025 05:19 AM

மந்தாரக்குப்பம்: மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சார்பில், 18 வயதிற்குற்பட்ட மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி நடைபெற்றது.
இதில் மாநிலத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
அனைத்து போட்டி முடிவுகளில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள் குழுவினர் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் குழுவினரை என்.எல்.சி., பள்ளி கல்வி செயலாளர் பிரபாகரன், விளையாட்டு பள்ளி தாளாளர் நாராயணன், தலைமையாசிரியர் ஜாக்கப், பயிற்சியாளர், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் பாராட்டினர்.