தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் ஆதரவு
தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு என்.எல்.சி., தொழிற்சங்கத்தினர் ஆதரவு
ADDED : ஏப் 13, 2026 11:23 PM

நெய்வேலி-: நெய்வேலி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு என்.எல்.சி., திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21 மற்றும் 30 பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்தார். முன்னதாக, என்.எல்.சி., திராவிட தொழிலாளர் ஊழியர் சங்க சிறப்பு தலைவர் கோபாலன், பொது செயலாளர் சபா மணிமாறன் தலைமையிலான தொழிற்சங்க நிர்வாகிகள் சபா ராஜேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, வி.சி.க மாவட்ட செயலாளர் மருதமுத்து, தி.மு.க., நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, என்.எல்.சி., தொ.மு.ச., தலைவர் ஞான ஒளி, பொருளாளர் அப்துல் மஜித், அலுவலக செயலாளர் சீனிவாசன் மற்றும் என்.எல்.சி., தொ.மு.ச., துணைத் தலைவர்கள், பகுதி செயலாளர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
