/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., தொழிற்சங்க தலைவர் சஸ்பெண்ட்: தே.மு.தி.க., கண்டனம்
/
என்.எல்.சி., தொழிற்சங்க தலைவர் சஸ்பெண்ட்: தே.மு.தி.க., கண்டனம்
என்.எல்.சி., தொழிற்சங்க தலைவர் சஸ்பெண்ட்: தே.மு.தி.க., கண்டனம்
என்.எல்.சி., தொழிற்சங்க தலைவர் சஸ்பெண்ட்: தே.மு.தி.க., கண்டனம்
ADDED : செப் 23, 2024 07:33 AM
பண்ருட்டி : நெய்வேலி என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு, தே.மு.தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெய்வேலி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆக., 6ம் தேதி தே.மு.தி.க., மாநில பொதுச்செயலாளர் பிரேமலதா, போராட்டத்தை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் போராட்டங்களை துண்டுவதாக என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணிசெல்வராஜ், சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்.எல்.சி.,நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை தே.மு.தி.க., கண்டிக்கிறது. அவருக்கு உடன் பணி வழங்கிடவும். என்.எல்.சி.,நிர்வாகம், தொழிற்சங்கத்தை அழைத்து பேசி சமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.