UPDATED : நவ 13, 2026 07:57 PM
ADDED : நவ 13, 2026 07:54 PM

நெய்வேலி: என்.எல்.சி.,விஜிலென்ஸ் துறை சார்பில் நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழா நிறைவடைந்தது.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11ல் உள்ள அரங்கத்தில் நடந்த விழாவிற்கு என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் ஆச்சார்யா தலைமை தாங்கினார். இயக்குனர்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், ராஜேஷ் பிரதாப் சிங், சைதன்ய பிரகாஷ், விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். விஜிலென்ஸ் துறையின் முதன்மை பொது மேலாளர் சித்ரகலா வரவேற்றார். விழாவில், நெய்வேலி விஜில் எனும் விழா மலரை வெளியிட்டு சேர்மன் பிரசன்னகுமார் ஆச்சார்யா பேசுகையில்., என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துடன் சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையது. மனிதத் தலையீடுகளைத் தவிர்த்து அனைத்து நிறுவன அமைப்புகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான கண்காணிப்பைக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றார்.
கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசுகையில், சமூக வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் அவசியமாகும். நிலையான வளர்ச்சியை அடைவதற்கு நடைமுறைத் தவறுகளைக் குறைப்பதும், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து செயல்படுவதும் மிக முக்கியம் என்றார்.
பொது மேலாளர் குணசேகரன் கூறினார்.
