/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., புதிய தொழிலாளர்களுக்கு 'டபிள்யு-2' ஸ்கேல் சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
என்.எல்.சி., புதிய தொழிலாளர்களுக்கு 'டபிள்யு-2' ஸ்கேல் சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை
என்.எல்.சி., புதிய தொழிலாளர்களுக்கு 'டபிள்யு-2' ஸ்கேல் சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை
என்.எல்.சி., புதிய தொழிலாளர்களுக்கு 'டபிள்யு-2' ஸ்கேல் சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜன 12, 2025 06:23 AM

நெய்வேலி : என்.எல்.சி., யில் இன்கோசர்வ் சொசைட்டியில் இருந்து புதிதாக நிரந்தர பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு டபிள்யு.ஓ., வுக்கு பதிலாக 'டபிள்யு-2' என்ற ஊதியம் நிர்ணயம் செய்ய, கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டசபையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசினார்.
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
கவர்னர் உரையில் தமிழக முதல்வரின் பல்வேறு சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 43 மாதங்களில் தி.மு.க., அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளையும் தாண்டி, புதிய திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது.
பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது. அதனால் தமிழகத்தில் தனி நபர் வருமானம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தி 695 ஆகும். கடந்த ஆண்டைவிட இது 14 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றத்தில்தான் உள்ளது என்பதை உணர்ந்த முதல்வர் பெண்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
மகளிர் உரிமை திட்டத்தில் தமிழகத்தில் 1.15 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். ஆனால், எதிர்கட்சி உறுப்பினர் கோவிந்தசாமி பேசுகையில்., ரூ.1000 கொடுப்பதால் கிராம பொருளாதாரம் வளர்ச்சியடைந்து விடுகிறதா என்கிறார்.
எதிர்கட்சியினர் மக்களை சந்திக்க வேண்டும் அல்லது சட்டசபையில் பேசுவதையாவது கேட்க வேண்டும். மகளிர் விடியல் பயண திட்டத்தில் 2021 ம் ஆண்டில் 32 லட்சமாக இருந்த பெண்களின் தினசரி பயண எண்ணிக்கை, 57 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை, 571 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு பெண்ணின் பயணமும் அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பயன்பட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 987 தொடக்க பள்ளிகளில் 17.53 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தில் இதுவரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்கும் 4.25 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழ் புதல்வன் திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் மட்டும் 3.52 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழர்களுக்கான விளையாட்டில் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும்.
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் விளையாட்டு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக விளங்கி வருகிறது.
சிந்துவெளி நாகரிகத்தின் தொண்மை, பெருமையை சிறப்பாக வெளிக்கொண்டுவரும் அறிஞருக்கு ரூ. 8 கோடி வரை பரிசு அறிவித்திருக்கும் முதல்வரின் தமிழ் ஆர்வத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
எனது தொகுதிக்குட்பட்ட என்.எல்.சி.,யில் இன்கோசர்வ் சொசைட்டி வாயிலாக, பணி நிரந்தரம் பெறும் தொழிலாளர்களின் ஊதிய நிலைகளை, ட.பிள்யு ஓ. ஏ., என்பதை டபிள்யு- 2. என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை கடலுார் மாவட்ட கலெக்டர் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கடலுார் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசினார்.