தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., தொழிலாளி பலி லாரி டிரைவர் கைது

 என்.எல்.சி., தொழிலாளி பலி லாரி டிரைவர் கைது

 என்.எல்.சி., தொழிலாளி பலி லாரி டிரைவர் கைது


ADDED : ஜூன் 18, 2026 07:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 07:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: ஜூன் 18-: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் அருகே வி.கே.டி., பைபாஸ் சாலையில் கடந்த 5ம் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி, வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

சேத்தியாத்தோப்பு போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்த நபர், ஊ.அகரம் மெயின்ரோட்டை சேர்ந்த ஜெயவேல், 41; என்.எல்.சி.,ஒப்பந்த தொழிலாளி, என தெரிந்தது.

விபத்து ஏற்படுத்தியது டெம்போ லாரி என தெரிந்ததையடுத்து, டிரைவர், விழுப்புரம் மாவட்டம், டி.புதுப்பாளையத்தை சேர்ந்த ஜனானர்தனன் மகன் செல்வவிநாயகம், 42; என்பவரை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us