/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மயானத்திற்கு பாதை வசதி இல்லை: இறந்தவர் உடலுடன் சாலை மறியல்
/
மயானத்திற்கு பாதை வசதி இல்லை: இறந்தவர் உடலுடன் சாலை மறியல்
மயானத்திற்கு பாதை வசதி இல்லை: இறந்தவர் உடலுடன் சாலை மறியல்
மயானத்திற்கு பாதை வசதி இல்லை: இறந்தவர் உடலுடன் சாலை மறியல்
ADDED : நவ 14, 2025 11:33 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு பகுதி மக்கள், பெண்ணையாற்றின் ஓரம் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த இடத்துக்கு தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவே செல்ல வேண்டும். தற்போது அந்த நிலத்தின் உரிமையாளர் சுற்றுச்சுவர் கட்டியதால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல வழியில்லால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த பலராமன் என்பவர், உடல் நலக்குறைவால் இறந்த நிலையில், மாலை அவரது உடலை எடுத்து வந்தவர்கள் திடீரென கஸ்டம்ஸ் சாலையில் உடல் இருந்த வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தி மறியல் செய்தனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி, 'விரைவில் சாலை அமைத்து விடுவர். அதுவரை வழிவிட வேண்டும்,' என வலியுறுத்தினார். நிலத்தின் உரிமையாளரும், சுற்றுச்சுவரை அகற்றி வழிவிட்டார்.
இதையடுத்து, பலராமன் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.