/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
10 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை; அ.தி.மு.க., சொரத்துார் ராஜேந்திரன் பேச்சு

ADDED : அக் 07, 2025 12:36 AM

கடலுார்; கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் நடந்தது.
மாநில ஜெ., பேரவை துணை செயலாளர்கள் சி வசுப்பிரமணியன், பக்தரட்சகன், தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் மாலதி, வினோத், ஜெயசூர்யா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசுகையில், '540 வாக்குறுதிகள் கொடுத்து 2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டிலேயே 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். ஆனால், ஆட்சி முடிய நான்கு மாதங்களே உள்ள நிலையில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எந்த ஒரு வாக்குதியும் முறையாக நிறைவேற்றாத தி.மு.க., வை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டனர். வரும் 2026 சட்டசபை தேர்தில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்றார்.
கூட்டத்தில், கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், வினோத், பாபு, ஆனந்த பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், ஞானசெல்வி கல்யாணசுந்தரம், பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தங்கப்பன், இணை செயலாளர் பெருமாள், இளைஞரணி செயலாளர் அன்பு, அண்ணாமலை பங்கேற்றனர்.