தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பணி குறித்த தகவல் பலகை நுகர்வோர் சங்கம் கோரிக்கை

பணி குறித்த தகவல் பலகை நுகர்வோர் சங்கம் கோரிக்கை

பணி குறித்த தகவல் பலகை நுகர்வோர் சங்கம் கோரிக்கை


ADDED : பிப் 25, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நுகர்வோர் பாது காப்பு குழு கூட்டம் நடந்தது. கமிஷ்னர் கிருஷ்ணராஜன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மெய்யழகன், மாவட்ட தலைவர் பழனிவேல், நகர தலைவர் பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள் சத்தியா, புனிதவதி, சங்க செயலாளர் செல்வம், கண்ணன், சுப்ரமணி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஓட்டல்களில் உணவு தரமாக வழங்கபடுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும், நகராட்சி மூலம் பணி நடக்கும் இடத்தில் பணியின் விபரம் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us