/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் வரும் 25ம் தேதி நகரமன்றக் கூட்டம் நடத்த அறிவிப்பு

ADDED : அக் 21, 2024 06:45 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் 'தினமலர் செய்தி' எதிரொலியாக நகரமன்ற கூட்டம் வரும் 25ம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று 6 மாதத்துக்கு தொடர்ந்து மாதத்திற்கு ஒரு முறை நகரமன்ற கூட்டம் நடந்து வந்தது. சில மாதங்களில் இரண்டு முறை கூட கூட்டம் நடந்தது.
கடைசியாக கடந்த ஜூலை 18ம் தேதி கூட்டம் நடந்தது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை. கூட்டம் நடக்காததால் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச முடியவில்லை.
மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் கூட்டம் நடத்த வேண்டும்.இல்லாவிட்டால் உரிய காரணம் கூறி கூட்டம் நடத்தாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். இந்த மாதம் கூட்டம் நடத்துவார்களா அல்லது அனுமதி பெற்று கூட்டம் நடத்துவதை தள்ளிபோடுவார்களா என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து வரும் 25ம் தேதி 56 தீர்மானங்களுடன் கூட்டம் நடத்துவதற்கான அழைப்பை கவுன்சிலர்களுக்கு அனுப்பியுள்ளனர்.