/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
/
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 10, 2025 02:33 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை-கன்னியாகுமரி தொழில்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடலுாரில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. இதன் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பத்தில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டது.
அதன் மீது சிமெண்ட் சிலாப் அமைத்து மூடப்பட்டது.
இதனை மக்கள் நடைபாதையாக பயன்படுத்தினர். வடிகால் வாய்க்கால் மீது வியாபாரிகள் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
அதில், 'வடிகால் வாய்க்கால் மீது நடைபாதை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் சாலையில் நடக்க வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் நடக்கிறது.
எனவே, 15 நாட்களுக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.