/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க அறிவிப்பு
/
குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க அறிவிப்பு
ADDED : டிச 09, 2024 08:08 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பிரகடனப்படுத்தப்பட்ட குற்ற வாளி குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் செய்திக்குறிப்பு;
திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு குற்ற வழக்கில், கடலுார் மாவட்டம், சோழன் நகரை சேர்ந்த மன்சூர் மகன் ஜக்ருதீன் அகமது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர், புதுக்கோட்டை கூடுதல் அமர்வு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால் பிடிக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
குறிப்பிட்ட முகவரியில் அவர் இல்லாததால் அவரது ஜாமின்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோர்ட் அறிவித்துள்ளது. மேலும், வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு கோர்ட்டில் தவறாமல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கண்டவுடன் ஜக்ருதீன் அகமது தவறாமல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். மேலும், அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் அல்லது நேரில் பார்த்தாலோ மற்றும் தற்போதைய முகவரி குறித்து தகவல் தெரிந்தால் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் முகவரி அல்லது 94981 07759, 86681 77903 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.