/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு, நிலங்களை காலி செய்ய நோட்டீஸ்; கலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு
/
வீடு, நிலங்களை காலி செய்ய நோட்டீஸ்; கலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு
வீடு, நிலங்களை காலி செய்ய நோட்டீஸ்; கலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு
வீடு, நிலங்களை காலி செய்ய நோட்டீஸ்; கலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு
ADDED : ஜன 07, 2025 07:29 AM

கடலுார்; கடலுார் அருகே மலை கிராமத்தில் வசிக்கு் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று காலை கலெக்டரிடம் முறையிட்டனர்.
கடலுார் தாலுகா, கேப்பர் மலையில் 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதில், கொடுக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.
கரடு, முரடாக இருந்த அங்குள்ள இடத்தை திருத்தி, முந்திரி உள்ளிட்ட பயிர் செய்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இடத்திற்கும், விவசாய நிலத்திற்கும் அதிகாரிகளிடம் பட்டா கேட்டு நடையாய் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளையும், ஜீவனம் செய்யும் நிலங்களையும் காலி செய்யுமாறு, தாசில்தார் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் நேற்று காலை கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட பா.ம.க, மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 2 பேர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டுள்ளனர்.

