/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க அறிவிப்பு
/
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க அறிவிப்பு
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க அறிவிப்பு
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க அறிவிப்பு
ADDED : மார் 07, 2024 01:33 AM
கடலுார் : பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் புதுப்பித்துக்கொள்ள வரும் 9 ம் தேதி கடலுாரில் முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பாஸ் புதுபிக்கப்படுகிறது. 2024---2025ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பாசை புதுபிக்கும் முகாம் வரும் 9ம் தேதி, கடலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.
கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், முகாமில் பங்கேற்று, புதுப்பித்துக்கொள்ளலாம். தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல் மார்பளவு புகைப்படம்-4, ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் இலவச பஸ் பாஸ் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.