/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது
/
குண்டர் சட்டத்தில் பிரபல ரவுடி கைது
ADDED : ஜன 22, 2024 06:24 AM

கடலுார் : சிதம்பரம் அருகே பிரபல ரவுடி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே வல்லம்படுகையை சேர்ந்தவர் ராமையன், 75; இவர், கடந்த மாதம் 21ம் தேதி வீட்டு முன்பு நின்றிருந்தபோது, மேலகுண்டலபாடியை சேர்ந்த முருகன், 47; ராமலிங்கம், 35; ஆகியோர், அவரை தாக்கி, வழிப்பறி செய்தனர்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
இதில், முருகன் மீது அண்ணாமலை நகர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சத்திரம், ஏ.கே., சத்திரம், சீர்காழி, புதுப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளது.
எனவே, இவரது குற்ற செயலை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டருக்கு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், முருகன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.