ADDED : அக் 08, 2024 02:48 AM

அ நிறம் | அளவு
கடலுார்: மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.
பாதிரிக்குப்பம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. முகாம் நிறைவு விழாவிற்கு, பள்ளி முதல்வர் டாக்டர் நசியான் கிரகோரி தலைமை தாங்கினார்.
என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், தொழில் முனைவோர் ஜெய்குமார் ஷர்மா, பாபாஜி முதியோர் இல்ல நிறுவனர் சிவசங்கரி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா சேவைத் திட்டங்களைப் பாராட்டி, சிறந்த சமூக சேவைக்கான அரிமா சங்க விருதை திட்டஅலுவலர் டாக்டர் சுரேஷ் ராஜனுக்கு வழங்கினார்.
உதவி தலைமைஆசிரியர்கள் சார்லி பெலிக்ஸ், வில்லியம்ஸ், ஆரோக்கியசாமி வாழ்த்திப் பேசினர்.
விழாவில் மாணவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
