/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செவிலியர்கள் ஆர்ப்பாட்ட முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
/
செவிலியர்கள் ஆர்ப்பாட்ட முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
செவிலியர்கள் ஆர்ப்பாட்ட முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
செவிலியர்கள் ஆர்ப்பாட்ட முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : நவ 29, 2024 04:30 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
இதில், தமிழகம் முழுவதும் உள்ள கிராம பகுதி சுகாதார செவிலியர்களுக்கான 3 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மாநில தலைவர் மணிமேகலை தலைமையில், செயலாளர் வேளாங்கண்ணி முன்னிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட செவிலியர்களை தடுத்து நிறுத்தி, கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தினர். இதை ஏற்று செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.