ADDED : செப் 12, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
வடலுாா்: நர்சிங் மாணவி மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது
காட்டுமன்னார்கோவில் அடுத்த கறட்டான்புலியூரை சேர்ந்தவர் முத்துவேல் மகள் அகஸ்தியா, 20; வடலுாரில் தனியார் செவிலியர் கல்லுாரி விடுதியில் தங்கி, பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த, 9ம் தேதி மாலை விடுதியில் இருந்து அவர் திடீரென மாயமானார். மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அகஸ்தியாவின் சகோதரர் அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து அகஸ்தியாவை தேடி வருகின்றனர்.
