/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
/
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
ADDED : நவ 08, 2025 01:54 AM

கடலுார்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். சித்ரா, ஜீவா, விஜயா, அருணாசலம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அறிவழகன் துவக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பு குழு தலைவர் ரெங்கசாமி விளக்க உரையா ற்றினார். மாநில துணைத் தலைவர் குணா கண்டன உரையாற்றினார்.
மாவட்ட தலைவர்கள் ரெங்கநாதன், ராஜேந்திரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், மணிதேவன் பேசினர்.
இதில், சத்துணவு திட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளர் இந்திரா நன்றி கூறினார். பின், கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

