/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்
/
சத்துணவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 11, 2026 03:47 AM

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
மாநில பொதுசெயலாளர் டெய்சி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வசந்தா, அன்பரசி முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 6,750 ரூபாய் சிறப்பு பென்ஷன் வழங்க வேண்டும்,
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

