/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 18, 2026 04:09 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தொடர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் ஞானஜோதி தலைமை தாங்கினார்.
அமராவதி, கலையரசி, கலைமதி, பிச்சையம்மாள், பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி, ஷகிலா, கிருஷ்ணவேணி, தனலட்சுமி மீனாட்சி, மாவட்ட செயலர் நாட்டுதுரை, வட்ட செயலர் விஜயகுமார், மாநில சிறப்பு தலைவர் சீனுவாசன், மாவட்ட தலைவர் மணித்தேவன் உள்ளிட்ட நி ர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், ஐகோர்ட் உத்தரவின்படி அகவிலைபடியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர்களே செயல்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சில்வர் தட்டில் கரண்டி மூலம் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேல்முருகன் நன்றி கூறினார்.

