/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்துணவு ஊழியர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 06:30 AM

கடலுார்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுமதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருணாசலம், சி்த்ரா, ஜீவா, ருக்மணி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் விஜயா வரவேற்றார். மாவட்ட அமைப்பு குழுத் தலைவர் ரங்கசாமி, மாவட்ட செயலாளர் அறிவழகன் கண்டன உரையாற்றினர்.
பாலசுப்ரமணியன், ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் குணா நிரைவுரையாற்றினார். தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

