ADDED : ஜன 06, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மச்சேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாவாடை விளக்க உரையாற்றினார். நிர்வாகிகள் கருணாகரன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். காசிநாதன், நடராஜன் வாழ்த்தி பேசினர்.
மாநில பொருளாளர் ராமநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
