/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலை புனரமைக்க ஓ.கீரனுார் மக்கள் கோரிக்கை
/
கோவிலை புனரமைக்க ஓ.கீரனுார் மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 30, 2024 05:59 AM

பெண்ணாடம் : ஓ.கீரனுாரில் சிதிலமடைந்த அய்யனார் கோவிலை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் ஊரணி பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்கள் விசேஷமாக நடப்பது வழக்கம். தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.
கோவிலுக்கு ஓ.கீரனுார், பூவனுார், கோனுார், தாழநல்லுார் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
பராமரிப்பின்றி உள்ள இக்கோவில் சுவர்கள், கோபுரங்கள் சேதமடைந்து, செடி, கொடிகள் மண்டி உள்ளது. மேலும், சுவரில் உள்ள கற்கள் சரிந்து, விழும் அபாயம் உள்ளது.
இதனால், பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலுக்குள் பூஜை செய்யவும், தரிசனம் செய்யவும் அச்சமடைகின்றனர். எனவே, சிதிலமடைந்துள்ள ஓ.கீரனுார் அய்யனார் கோவிலை புனரமைக்க மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.