UPDATED : அக் 30, 2026 06:57 PM
ADDED : அக் 30, 2026 06:55 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் லாரன்ஸ்ரோடு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி இந்திய கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாநகர செயலாளர் நாகராஜ் தலைமையில், துணை செயலாளர் மணிவண்ணன், முருகன், அரிகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு:
கடலுார் லாரன்ஸ்ரோடு நடைபாதையானது மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பில் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் லாரன்ஸ்ரோட்டில் மழைநீர் தேங்கும் நிலையில், மக்கள் நடந்து செல்ல நடைபாதை அவசியம் தேவைப்படுகிறது. எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த லாரன்ஸ்ரோட்டில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
