ADDED : மார் 16, 2024 11:56 PM
கடலுார்: பெண்ணை திட்டிய வழக்கில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த எம்.புதுாரை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி பூங்கொடி, 35; இவருக்கு அதே பகுதியில் முந்திரி தோப்பு உள்ளது. அப்பகுதியில் நடக்கும் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கிராவல் மண் லாரியில் எடுத்துச்சென்றபோது, முந்திரி மரத்தின் மீது புழுதி படர்ந்துள்ளது.
இது குறித்து பூங்கொடி கடந்த 2023ம் ஆண்டு செப்., மாதம் நெடுஞ்சாலை துறை லைசெனிங் மேலாளரான வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த டில்லிபாபு, 35; என்பவரிடம் புகார் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பூங்கொடியை, டில்லிபாபு திட்டினார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் டில்லிபாபு மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று டில்லிபாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

