/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
/
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
ADDED : மார் 18, 2025 04:49 AM

கடலுார், : புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கணக்கெடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து, மாவட்ட காவல் துறை, மாவட்ட தொழிலாளர் நல வாரியம், மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை திட்ட இயக்குனர் அலுவலகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம், துணை ஆணையர்கள் மகேஷ்குமார், விக்னேஷ், சிப்காட் திட்ட இயக்குனர் காந்திமதி, ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் வேலையில் அமர்த்தப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெயர்கள் தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதனை ஒப்பந்ததாரர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பட்டியல் ஏற்படுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.