ADDED : பிப் 02, 2026 03:40 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. நுழைவு வாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 9:00 மணிக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சத்திய ஞான சபைக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அதிகாரிகள், விழா ஏற்பாடுகளை நாங்கள்தான் முன்னின்று நடத்துகிறோம் எங்களையே உள்ளே செல்ல அனுமதி மறுக்கிறீர்கள் என, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு செல்ல, அறநிலையத்துறை அதிகாரிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
