/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
/
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்
ADDED : ஆக 02, 2025 07:54 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், இரண்டு நாள் பயிலரங்கம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி இயக்குனர் அவ்வை அருள் துவக்க உரையாற்றினார். கடலுார் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி வரவேற்றார். கிருஷ்ணகிரி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதிலட்சுமி, வடலுார் ஓமந்துாரார் கல்வி நிறுவனங்கள் முதல்வர் சந்திரசேகரன் கருத்துரையாற்றினர்.
இரண்டாம் நாளான நேற்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல்துறை உதவி பேராசிரியர் கல்பனா சேக்கிழார் கணினி பயிற்சி குறித்து பேசினார். புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கக விரிவுரையாளர் பூங்குழலி பெருமாள் தமிழ் மொழியை தவறில்லாமல் எழுதுவது, உச்சரிப்பது குறித்து மொழிப்பயிற்சி அளித்தார்.