ஆட்சிமொழிப் பயிலரங்கம் 17, 18 ம் தேதிகளில் நடக்கிறது
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 17, 18 ம் தேதிகளில் நடக்கிறது
UPDATED : நவ 05, 2026 11:59 PM
ADDED : நவ 04, 2026 09:20 PM
கடலுார்: மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் வரும் 17 மற்றும் 18 ம் தேதிகளில் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக செயல்படுத்திடுவதற்கு அரசுத் துறைகளின் அலுவலர், பணியாளர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில், கடலுார் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் கடலுார் கலெக்டர் அலுவலக, கூட்ட அரங்கில் நடக்கிறது.
மாவட்டத்திலுள்ள அரசுத் துறை, வாரியம், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகிய நிலையில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்துகொள்ளலாம்.
மேலும், 18ம் தேதி மாலை 3.30 மணிக்கு கருத்தரங்கத்தில் கலெக்டர் தலைமையேற்று சிறப்புரையாற்றுகிறார்.
