தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெற்பயிரில் சிலந்தி தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனை 

நெற்பயிரில் சிலந்தி தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனை 

நெற்பயிரில் சிலந்தி தாக்குதல்: அதிகாரிகள் ஆலோசனை 


UPDATED : ஜூலை 09, 2026 04:00 PM

ADDED : ஜூலை 09, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 04:00 PM ADDED : ஜூலை 09, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: குமராட்சியில் நெற்பயிரில் சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

குமராட்சி அடுத்த வடக்கு மாங்குடி, அத்திப்பட்டு, கீழக்கரை, கருப்பூர், நலன்புத்துார், முள்ளங்குடி, வானதிராயன்பேட்டை ஆகிய கிராமங்களில் 5,650 ஏக்கருக்கு நெல் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இக்கிராமங்களில் குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்வேல் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்தனர்.

அப்போது, தற்போது நிலவும் தொடர்ச்சியான வறண்ட வானிலை மற்றும் அதிக வெப்பத்தால் ஒலிகோனைக்கஸ் ஒரைசே என்ற நுண்ணிய சிலந்தி அதிக இனவிருத்தி அடைந்து சில இடங்களில் மட்டும் நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தியது தெரிந்தது.

தொடர்ந்து, தழைச்சத்து உரங்களை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இட வேண்டும்; வயலில் வறட்சி இல்லாமல் சீரான இடைவெளியில் நீர் பாசனம் செய்ய வேண்டும்; இதன் மூலமாக சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்; என, விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

வேளாண்மை அலுவலர் நடராஜன், உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேஷ் பிரவின், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us