ஆளும் கட்சி திட்ட துவக்க விழா கூட்டணி எம்.எல்.ஏ.,வை புறக்கணித்த அதிகாரிகள்
ஆளும் கட்சி திட்ட துவக்க விழா கூட்டணி எம்.எல்.ஏ.,வை புறக்கணித்த அதிகாரிகள்
ADDED : செப் 22, 2026 08:12 PM
முதல்வர் விஜய், நேற்று காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இத்திட்ட துவக்க விழா மோவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவில், பி.டி.ஓ., அழகானந்தம் உள்ளிட்ட பி.டி.ஓ.,க்கள், சமூக நலத்துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்று திட்டத்தை துவக்கி வைத்தனர்.
மற்ற தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்கள் துவக்கி வைத்த நிலையில், இத்தொகுதி எம்.எல்.ஏ.,வான ஜோதிமணி பங்கேற்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், ்காலை உணவு விரிவாக்க திட்ட துவக்க விழா எங்கு நடக்கிறது, எப்போது நடக்கிறது என்பது குறித்து எம்.எல்.ஏ., விற்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வராததால், எம்.எல்.ஏ., நேற்று காலை சென்னைக்க புறப்பட்டு சென்றுள்ளார்.
ஒன்றிய அதிகாரிகள் பொதுவாகவே, எம்.எல்.ஏ.,வை எந்த அரசு விழாவிற்கு அழைப்பது இல்லை என எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
அரசு விழாவிற்கு மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏ.,வை அதுவும், கூட்டணி கட்சியான வி.சி.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,வை அதிகாரிகள் அழைக்காமல் புறக்கணித்து வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
