/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சிக்கு வாடகை பாக்கி; கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்'
/
மாநகராட்சிக்கு வாடகை பாக்கி; கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்'
மாநகராட்சிக்கு வாடகை பாக்கி; கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்'
மாநகராட்சிக்கு வாடகை பாக்கி; கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்'
ADDED : பிப் 09, 2024 11:24 PM

கடலுார் : கடலுார் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாநகராட்சி சார்பில் பஸ் நிலையம் மற்றும் லாரன்ஸ் சாலையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ள 12 கடைக்காரர்கள் ரூ.70 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
இதையடுத்து 12 கடைக்காரர்களுக்கும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டும், இதுவரை வாடகை பாக்கி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் கலைவாணி தலைமையிலான அலுவலர்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.
அப்போது கடைக்காரர்கள் ரூ.2000 இருந்த வாடகை தற்போது ரூ.27 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் தங்களால் வாடகை செலுத்த முடியவில்லை என்று கூறி சீல் வைக்க விடாமல் தடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அதிகாரிகள், முதற்கட்டமாக இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர். அப்போது மற்ற 10 கடைக்காரர்கள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், சீல் வைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.