தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை


ADDED : பிப் 19, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: ராமநத்தம் அருகே காதுவலி காரணமாக 80வயது மூதாட்டி அரளிவிதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மனைவி பாப்பா,80. இவருக்கு 2 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். ஆலத்துார் கிராமத்திலுள்ள பிச்சைப்பிள்ளை என்ற தனது மூத்த மகனின் பராமரிப்பில் இருந்துவந்தார்.

4 ஆண்டுகளாக காதுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பாப்பா, நேற்று முன்தினம் காலை அரளிவிதை சாப்பிட்டார். அவரை, உறவினர்கள் மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us