ADDED : செப் 27, 2026 10:53 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: புதுச்சேரி மாநில சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை பகுதியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரி, மாநில சாராய பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர், கண்டரக்கோட்டை தேவத்தான் நகர் சேர்ந்த சின்னதம்பி,76; என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
