தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பழைய தாலுகா அலுவலகம்  சீரமைப்பு பணிகள் தீவிரம் 

 பழைய தாலுகா அலுவலகம்  சீரமைப்பு பணிகள் தீவிரம் 

 பழைய தாலுகா அலுவலகம்  சீரமைப்பு பணிகள் தீவிரம் 


ADDED : பிப் 25, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: பழைய தாலுகா அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

கடலுார் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள பழமையான கட்டடத்தில் ஏற்கனவே தாலுகா அலுவலகம் இயங்கியது.

இங்கு, நாளடைவில் கட்டடம் பழுது ஏற்பட்டதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பழைய கட்டட அலுவலக வளாகத்திலேயே, புதிய தாலுகா அலுவலகம் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரியில், அப்போதைய தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது. இதையடுத்து பழைய கட்டடம் எந்த பயன்பாட்டிற்கும் இன்றி மூடப்பட்டது. தற்போது, இங்கு, ஆதார் சேவை மையம் இயங்க துவங்கியது. இந்நிலையில், பழைய தாலுகா அலுவலகத்தில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கான நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட உள்ளது.

இதன் காரணமாக அலுவலகம் சுத்தம் செய்தல், மின் சாதனங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இங்கு இயங்கி வந்த ஆதார் மையம், அரசின் இ-சேவை மைய கட்டடம் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us