நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த புவனகிரியில், உடல் நலமின்றி இறந்தமூதாட்டியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
சிதம்பரம் அடுத்துள்ள புவனகிரி, கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர்செந்தாமரை, 75: இவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
அதனையடுத்து, அவரது மகன்கள் கிரீடு நடனசபாபதி, கமலவண்ணன் ஆகியோரிடம், சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், பேசி, தாயின் கண்களை தானமாக பெற சம்மதம் பெற்றார்.
அதனையடுத்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் விரைந்து சென்று, அறுவை சிகிச்சை மூலம், கண்களை தானமாக பெற்று, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.