நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : மகன் புகாரின் பேரில், மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் பழைய காலனியை சேர்ந்தவர் வீரமுத்து மனைவி அன்னசேவை, 75. கடந்த 8ம் தேதி, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பேரனை பார்க்க புறப்பட்டார்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் பழனிவேல், 46; புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

