ADDED : டிச 04, 2024 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி சின்னபொண்ணு,78; இவர், உடல்நலக் குறைவால் இறந்தார்.
இவரது உடலை தானமாக வழங்க மகன்கள் நெடுஞ்செழியன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் அரிமா சங்கத்துக்கு தகவல் கொடுத்தனர்.
டாக்டர் சந்திரசேகரன், அரிமா மாவட்ட தலைவர் ஜெயசந்திரன் ஆகியோர் ஒத்துழைப்புடன் சின்னபொண்ணுவின் கண்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அதேபோல் உடலை புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனைக்கு வழங்கினர்.