/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஒலிம்பிக் பாரத் விளையாட்டு போட்டி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஒலிம்பிக் பாரத் விளையாட்டு போட்டி
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஒலிம்பிக் பாரத் விளையாட்டு போட்டி
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஒலிம்பிக் பாரத் விளையாட்டு போட்டி
ADDED : நவ 12, 2024 06:46 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான ஒலிம்பிக்ஸ் பாரத் விளையாட்டு போட்டி நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். எஸ்.பி., ராஜாராம் போட்டியை துவக்கி வைத்தார்.
சிறப்பு பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி எஸ்.எஸ்.ஏ., சார்பில் 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். இதில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது, சிறப்பு ஒலிம்பிக் பாரத் கடலுார் மாவட்ட தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் லெனின் பிரபாகர், செயலாளர் எப்சிபா, பொருளாளர் வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.