/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் கைது
/
வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் கைது
ADDED : ஜன 08, 2024 05:46 AM
விருத்தாசலம்: சாலையோரம் மது அருந்தியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் ஆலடி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வம், 30; இவர் முல்லை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றார்.
அப்போது, பழமலைநாதர் நகரை சேர்ந்த காமராஜ் மகன்கள் சக்திவேல், 23; கந்தவேல், 21; முருகன் மகன் சிவா, 21; பெரியார் நகர் அஜித், 21, ஆகிய நால்வரும் சாலை ஓரமாக மது அருந்தினர். இதனை செல்வம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, சக்திவேல் உள்ளிட்ட நால்வரும், அவரை அசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த மது பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
விருத்தாசலம் போலீசார் சக்திவேல், கந்தவேல், சிவா, அஜித் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.