ADDED : செப் 24, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: ராமநத்தம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆவட்டியில் உள்ள பாலன்,46, என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் போலீசார் சோதனையிட்டதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 3ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த ராமநத்தம் போலீசார், வழக்குப்பதிந்து பாலனை கைது செய்தனர்.