/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
/
ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : மே 26, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு சுவேத நதி தீர்த்தத்துடன், மந்திராலய மரபின் படி, சிறப்பு பூஜைகள், அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, 6:00 மணி முதல், 10:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை, 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர்களான ராகவேந்திரர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுவாமி நாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் உதய சூரியன், பொருளாளர் கதிர்வேலு செய்திருந்தனர். ரமேஷ் உள்ளிட்ட ஆச்சாரியர்கள் பூஜைகள் செய்தனர்.