ADDED : நவ 13, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் அருகே ஆற்றில் மூழ்கி ஒருவர் இறந்தார்.
கடலுார் அடுத்த தென்னம்பாக்கம் மலட்டாற்று பாலம் அருகில் தண்ணீரில் இன்று (நவ.,13) காலை ஆண் சடலம் மிதந்தது. தகவலின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் நல்லாத்துார் அடுத்த என்.மணவெளியைச் சேர்ந்த சக்திவேல்,48; என்பது தெரிந்தது. இவர், ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
